தொடரும் சீரற்ற வானிலை – வடக்கிலும் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!

தொடரும் கனமழை காரணமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மரக்கறிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் வடக்கில் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக வடக்கு மரக்கறி வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்
இந்நிலையில், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து வட மாகாணத்துக்கு மரக்கறிகள் கொண்டு செல்லப்பட வேண்டியதன் காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்திருந்த போதிலும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பயிரிடப்படும் மரக்கறிகள், வட மாகாணத்தினுள்ளேயே பகிரப்படுவதால் அம்மாகாணத்தில் மரக்கறிகளின் விலைகள் இதற்கு முன்னர் அதிகரிக்கவில்லை.
ஆனால் அண்மைய கொரோனா தொற்று மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக வட மாகாண விவசாயிகள் மரக்கறிகளைப் பயிரிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதால், மரக்கறிகளைக் கொண்டு செல்ல முடியாமல் சிரமத்தை எதிர்நோக்கிய வடக்கில் உள்ள பல விவசாயிகள், காய்கறிகளைப் பயிரிடுவதை தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|