தொடருந்தில் மோதி 27 கால்நடைகள் உயிரிழப்பு – கிளிநொச்சியில் சோகம்!
Tuesday, January 1st, 2019கிளிநொச்சி – முறிகண்டி பிரதேசத்தில் நேற்று இரவு 27 கால்நடைகள் தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளன.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தொடருந்தில் மோதியே இவ்வாறு கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல விலங்குகள் அப்பகுதியில் உள்ள வீதிகள் மற்றும் தொடருந்து பாதையில் உலாவி வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உலாவி கொண்டிருந்த கால்நடைகளே தொடருந்தில் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
ஓய்வுநிலை ஆசிரியர் சின்னத்தம்பியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...
கூ.சங்கங்கள் அரிசியை இனி சமாசத்தில்தான் பெறவேண்டும் - மாகாண கூட்டுறவு ஆணையாளர்!
ஜனாதிபதி எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுசெல்ல வேண்டாம் - வாசுதேவ உள்ளிட்ட முன்னாள் அமைச்சர...
|
|