தைக்கக்கொடுத்த பாடசாலை சீ ருடையை எடுப்பதற்காக கீரை விற்ற சிறுமியை தாக்கிய கீரை வியாபாரி!

Wednesday, January 4th, 2017

 

யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவரை, வியாபாரி தாக்கிய சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி பொதுச்சந்தையில் கீரை விற்றுக்கொண்டிருந்த சிறுமி மீது சந்தையில் இருந்த 2 சக வியாபாரிகளான பெண்கள் நேற்று தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

வறுமையின் காரணமாக குறித்த சந்தையில் மலிவு விலையில் கீரை வியாபாரத்தில் ஈடுபட்ட 14 வயது மதிக்கத்தக்க பாடசாலை சிறுமியை அவருக்கு அருகிலே கீரை வியாபாரம் செய்துகொண்டிருந்த மற்றுமொரு வியாபாரி தாக்கியுள்ளார். தான் விற்கும் விலையினை விட குறைவான விலையில் கீரை விற்பனை செய்தமையால் குறித்த சிறுமியை அவ்விரு பெண்களும் தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் முகத்தில் பலமாக காயமடைந்த குறித்த சிறுமி சாவகச்சேரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸாருக்கு அயல் வியாபாரிகள் மூலம் அறிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிசார் தாக்கிய இரு பெண்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துந் சென்றனர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31710521

Related posts: