தேவைக்கு மேலதிகமாக 7 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவிப்பு!
Wednesday, September 27th, 2023நாட்டில் 7 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி, தேவைக்கு மேலதிகமாக இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த பெரும்போகம் மற்றும் சிறுபோகத்தில் மொத்த நெல் அறுவடை சுமார் 52 இலட்சம் மெட்ரிக் டன்னாக பதிவாகியுள்ளது.
அதனூடாக, 31 இலட்சம் மெட்ரிக் டன் அளவு அரிசியை உற்பத்தி செய்யமுடியும் எனவம் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை நாட்டின் வருடாந்த அரிசித் தேவை சுமார் 24 இலட்சம் மெட்ரி தொன்களாகும். எனவே, 7 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைக்கு மேலதிகமாக உள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, அடுத்த பெரும்போக அறுவடை வரை அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தேசிய அடையாள அட்டை வழங்கலுக்கான சுற்றறிக்கை இவ்வாரம்!
பிறப்பிக்கப்படும் சட்டதிட்டங்கள் நாட்டில் வாழும் அனைவருக்கும் பொதுவானது : அதிகாரத்தில் உள்ள எவரும் அ...
நாம் அதிகாரத்தை கைப்பற்றியபோது இலங்கை கடனில் மூழ்கியிருந்தது – பசில் ராஜபக்ச!
|
|