தேர்தல் முறையை மாற்றுவது தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை சமர்ப்பிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை!

Friday, February 11th, 2022

தேர்தல் முறையை மாற்றுவது தொடர்பான, விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு, தமது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான, பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற குறித்தக் குழுவின் கலந்துரையாடலில், அறிக்கையில் உள்ளடங்கவேண்டிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக, சபை முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் முறையை எவ்வாறானது? கலப்பு முறையிலான தேர்தலை அறிமுகப்படுத்துவதாயின், தொகுதி மற்றும் விகிதாசாரம் என்பன எவ்வாறாக அமையப்பெற வேண்டும் என்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு, எதிர்வரும் 22 ஆம் மற்றும் 24 ஆம் திகதிகளில், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் மீண்டும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: