தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை பிரேரணை மீதான விவாதம் ஒரு மாதத்திற்கு ஒத்திவைப்பு!

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஆலோசனைக் குழு தீர்மானித்துள்ளது.
நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்களுக்கான ஆலோசனைக் குழு, விஜயதாச ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (17) நாடாளுமன்றத்தில் கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, உரிய திருத்தங்களை பரிசீலித்த பின்னர், மறுவாழ்வு பணியக சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்கு உட்படுத்தி விவாதிப்பதற்கும் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, புனர்வாழ்வு பணியக சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக நாளை விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சனிக்கிழமையன்று போட்டிப் பரீட்சை!
பண்ணைப் பகுதி புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டது பெண் ஒருவரின் எச்சங்களா?
சதொச நிறுவன ஊழல் மோசடி தொடர்பான ஆவணங்கள் தயார் – ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் வழங்கத் தயார் - நுகர்வ...
|
|