தேர்தல் சட்டங்களில் நிலவும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு விசேட தெரிவுக்குழு – எதிர்வரும் திங்களன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

தேர்தல் மற்றும் வாக்களிப்பு சட்டங்களில் நிலவும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு விசேட தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இது தொடர்பில் குழு ஒன்றை நியமிக்கும் பிரேரணை எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்டிருக்கும் இந்தப் பிரேரணையை, எதிர்வரும் 5 ஆம் திகதி, சபை ஒத்திவைப்பு வேளையின் போது, அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
மோதலில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் இரத்து?
நாடுதழுவிய பணிப்புறக்கணிப்புக்கு ஆயத்தமாகும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள்!
நாளைமுதல் அனைத்து பொதுச் சேவைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை - அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூரா...
|
|