தேர்தல் ஆணையாளர் நாளை யாழ்ப்பாணம் வருகிறார்!

Thursday, November 3rd, 2016

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, நாளை வெள்ளிக்கிழமை (04) யாழ்ப்பாணத்துக்கு  விஜயம் செய்யவுள்ளதுடன், தென்மராட்சி கல்வி வலயத்தில் நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவுள்ளார்.

தென்மராட்சி கல்வி வலயத்தின் மாணவர் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் பற்றி விடயங்களை பார்வையிடுவதற்காக தேர்தல் ஆணையாளர் இங்கு வருகின்றார்.

மாணவர் நாடாளுமன்றத்தால் இதுவரையான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்கள் தொடர்பிலான விடயங்கள், மாணவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஆணையாளருக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளன.

Mahinda-Deshapriya-1

Related posts: