தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்த வாரம் மீளவும் கூடவுள்ளது – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Saturday, March 25th, 2023

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் குறித்து, அடுத்தக்கட்ட தீர்மானங்களை மேற்கொள்வதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்த வாரம் மீளவும் கூடவுள்ளது.

அடுத்த மாதம் 25ஆம் திகதி, தேர்தலை நடத்துவதில் உள்ள தடைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான எந்தவொரு வாக்குச்சீட்டும், அரச அச்சுத் திணைக்களத்திடமிருந்து, இதுவரையில் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: