தேர்தலை முன்னிட்டு தேசிய அடையாள அட்டை நள்ளிரவு வரை விநியோகம்!

Friday, February 9th, 2018

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை முன்னிட்டு தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கும் ஒரு நாள் சேவை இன்று நள்ளிரவு வரை இடம்பெறவுள்ளது.

இந்த சேவை இன்று நள்ளிரவு 12 மணி வரை இடம்பெறவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணதிலக தெரிவித்தார்.

அந்த வகையில் தேர்தலில் வாக்களிப்பதற்கு அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக ஆட்பதிவுத் திணைக்களம் இன்றைய தினம் நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்கும் என்பதுடன் நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts: