தேசிய விபத்துத் தவிர்ப்பு வாரம் பிரகடனம்!

Friday, September 15th, 2017

எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை விபத்து தவிர்ப்பு வார நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளதாகவும் பொலிசாரின் துணையுடன் சுகாதார அமைச்சின் தொற்றா நோய் தடுப்புப் பிரிவு இந்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்களை இயன்றளவு குறைப்பது இதன் நோக்கமென தொற்றா நோய்ப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் திலக் சிறிவர்தன தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய போது  தொவித்துதார்.

ஆண்டொன்றில் பத்தாயிரம் பேர் வரை விபத்துக்களால்  உயிரிழப்பதாக தொவித்த டொக்டர் சிறிவர்தன விபத்துக்களில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க அரசாங்கம் பெருந்தொகை பணத்தை செலவிடுவதாகவும்  கறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பொலிஸ் போக்குவரத்து தலைமையகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.டி.ஜெ.தனஞ்சய ,கவனயீனமும் பாதுகாப்பற்ற செயல்களும் விபத்துக்கள் அதிகரிக்க காரணம் என்றார்.

பெரும்பாலான விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்களுடன் தொடர்புடையவை. முச்சக்கரவண்டி விபத்துக்களும் அதிகரித்து வருவதாக பொலிஸ் போக்குவரத்து தலைமையகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.டி.ஜெ.தனஞ்சய  மேலும் தொவித்துதார்

Related posts: