தேசிய பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வது தொடர்பாக விசேட அறிவிப்பை விடுத்தது கல்வி அமைச்சு!.

Wednesday, April 24th, 2024

தேசிய பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களைப் பணியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக விசேட அறிவிப்பொன்றினை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடக ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை 3-1 (அ) தரத்தில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 2 ஆம் திகதி நடைபெற்ற போட்டிப் பரீட்சை முடிவுகளின்படி, ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுகள் ஏப்ரல் 29ஆம் திகதி முதல் மே 9ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் நடைபெறும் எனவும்  தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் மற்றும் அழைப்புக் கடிதம் கல்வி அமைச்சின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: