தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை நாளைய தினத்திற்குள் ஒப்படையுங்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை!

Thursday, August 13th, 2020

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அரசியல் கட்சிகளினால் முன்வைக்கப்படும் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை நாளைய தினத்திற்குள் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும் சில கட்சிகள் இதுவரையில் தங்களது தேசிய பட்டியல் உறுப்பினர்களை தெரிவு செய்யவில்லை.

எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த பெயர் பட்டியல் இன்று (13) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக ரஞ்சித் மத்தும பண்டார, ஹரீன் பெர்ணான்டோ, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், திஸ்ஸ அத்தனாயக்க, எரான் விக்ரமரத்ன, மயந்த திஸாநாயக்க மற்றும் டயனா கமகே ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அபே ஜன பல கட்சியின் தேசிய பட்டியல் தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படாமையே தேர்தல்கள் ஆணைக்குழுவின் இந்த அறிவிப்புக்க காரணம் என தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: