தேசிய காப்புறுதி பொறுப்பு நிதியம் இழப்பீடு

Monday, June 19th, 2017

வெள்ளம் மற்றும் மண்சரிவின் காரணமாக சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு 275 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய காப்புறுதி பொறுப்பு நிதியம் தெரிவித்துள்ளது.

நிதியத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சனத் சி டி சில்வா இதுதொடர்பாக தொவிக்கையில்

அனர்த்தத்தின் காரணமாக 23 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஓரளவு பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 700 ஆகும். இதற்கமைவாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பத்தாயிரம் ரூபா அடிப்படை இழப்பீடாக வழங்குவதற்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

குறிப்பிட்ட இழப்பீட்டை வழங்க நிதி கிடைத்திருப்பதாக மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுடன் சமீபத்தில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உறுதி செய்ததாக தெரிவித்த அவர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்காக 120 மில்லியன் ரூபா இதற்கு முன்னரும் வழங்கப்பட்டதாக மேலும் கூறினார்.

Related posts: