தேசிய கல்வியியற் கல்லூரிக்கு உள்வாங்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!  

Wednesday, October 4th, 2017

நாட்டில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தேசிய கல்வியியற் கல்லூரிக்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய கல்வியியற் கல்லூரிக்கு இம்முறை 4,775 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதாக கல்லூரியின் தலைவர்  கே.எம்.எச் பண்டார தெரிவித்துள்ளார். வருடாந்தம் நாடு முழுவதும் 8000 இற்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts: