தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தில் மத அமைப்புக்களும் இணைந்து கொள்ள வேண்டும் – பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்து!

Thursday, October 27th, 2022

உணவு விடயத்தில் நாட்டை தன்னிறைவடையச் செய்வதற்கான அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தில் கிராமிய விகாரைகள் மற்றும் ஏனைய மத அமைப்புக்களும் இணைந்து கொள்ள வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மாதிவெல கேதுமதி விகாரை மற்றும் பொல்வத்தை ஸ்ரீ சதர்மாராம விகாரை ஆகிய இடங்களில் நடைபெற்ற கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் தற்போது ஜனாதிபதியின் தலைமையில் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள விகாரைகள் மற்றும் பிற மத அமைப்புக்களின் பங்களிப்பு இந்த தகுதியான காரியத்தில் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்திற்கும் அரச அதிகாரிகள் அனுப்பப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவும் இது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ளது.

உணவு நுகர்வுக்கு மட்டுமின்றி, ஏற்றுமதி பயிர்களாகவும் பயன்படுத்தக்கூடிய பயிர்களில் ஒவ்வொரு மாவட்டமும் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, புத்தளம் மாவட்டத்தில் தற்போது பருத்திச் செய்கை மேற்கொள்ளப்பட்டு சுமார் எட்டு மாதங்களில் அறுவடை செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும்.

இந்த நிகழ்ச்சித் திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு முன்னுதாரணத்தை வழங்குவதுடன், வழமையை விட அதிக விளைச்சலை அதிகரிக்கும் பயிர்கள் மற்றும் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பயிர்கள் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும்” என பிரதமர் இதன் போது தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கிராமப்புற பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்புத் திட்டம் தற்போது 14,000 கிராமங்களில் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும், தற்போதைய நிதி நெருக்கடியைத் தீர்ப்பதுடன், உணவுவிடயத்தில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்வதே அரசாங்கத்தின் அபிலாஷை என்றும் பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: