தேங்காய்களின் விலையில் திடீரென உயர்வு!

Thursday, September 14th, 2017

யாழ். மாவட்டத்தில் தேங்காய்களின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தை உள்ளிட்ட சந்தைகளில் விலை நிலவரப்படி பெரிய தேங்காய் ஒன்று 80 ரூபா முதல் 85 ரூபா வரையும், நடுத்தரத் தேங்காய் ஒன்று 70 ரூபாவாகவும், சிறிய தேங்காய் ஒன்று 60 ரூபா முதல் 65 ரூபா வரையும் விற்பனை செய்யப்படுகின்றன.

யாழ். மாவட்டத்திலிருந்து பெருமளவு தேங்காய்கள் வெளிமாவட்டங்களிற்கு ஏற்றுமதியாகின்றமையாலும், காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகவும் கடந்த சில தினங்களாக யாழிலுள்ள சந்தைகளில் தேங்காய்களின் வரத்தில் பெரு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுவே தேங்காய்களின் திடீர் விலை அதிகரிப்பிற்குக் காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, சந்தைக்கு வெளியே வியாபார நிலையங்களில் ஒரு பெரிய தேங்காய் 95 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.தேங்காய்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமையால் வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் பலர் தேங்காய் விற்பனையை இடைநிறுத்தியுள்ளனர்.தேங்காய்களின் திடீர் விலை அதிகரிப்பால் நடுத்தர மற்றும் குறைந்தளவு வருமானம் பெறும் குடும்பங்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளன.இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெரிய தேங்காயொன்று 70 ரூபா முதல் 75 ரூபா வரையும், நடுத்தரத் தேங்காய் 50 ரூபாவாகவும், சிறிய தேங்காய் 40 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது

Related posts: