தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சிங்கம் ஒன்றுக்கு கொரோனா தொற்று!

Friday, June 18th, 2021

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சிங்கம் ஒன்று கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

குறித்த மிருகக் காட்சிச்சாலையின் சிங்கத்தீவில் வதியும் தோர் எனப்படும் சிங்கத்துக்கே தொற்று ஏற்பட்டுள்ளது. குறித்த சிங்கம் கடந்த 2012 ஆம் ஆண்டு தென்கொரியாவிலிருந்து தேசிய மிருகக்காட்சிச் சாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தச் சிங்கம் பல நாட்களாக இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் பாதிக்கப்பட்டிருந்ததையடுத்து பேராதெனிய கால்நடை பீடத்துக்கு சிங்கத்தின் சளி அனுப்பி பரிசோதிக்கப்பட்டதில் தொற்று உறுதியாகி யுள்ளது.

இதேவேளை சிங்கத்தின் கூண்டுக்குப் பொறுப்பான இரு காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பில் வனவிலங்கு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க கூறுகையில் – மிருகக்காட்சிசாலையில்  சிங்கம் ஒன்று நோய்வாய்ப்பட்டமை உண்மைதான். ஆனால் பி. சி. ஆர். சோதனை முடிவுகளில் பிழைகள் ஏற்படக்கூடும் என்பதால், இந்தியாவுடன் பேசவும், முறையான விசாரணையை நடத்தவும் மிருகக்காட்சிசாலையின் இயக்குநர்கள் குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

தேர்தல் தாமதிக்கப்பட்டால் சிம்பாப்வேயில் நடந்ததே இங்கு நடக்கும் - நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசி...
நான்காம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடையும் - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பி...
கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடு - கல்வி ...