தெற்காசியாவின் பலம்மிக்க பொருளாதார நாடாக இலங்கை உருவாகும் – பிரதமர்!

Wednesday, August 17th, 2016

வருங்காலத்தில் இலங்கை தெற்காசியாவில் அபிவிருத்தி அடைந்த  பலம் மிக்க  பொருளாதார வர்த்தக சந்தைக்கு உரிமை கோரும் நாடாக மாறும். எனவே  அதனை இலக்குவைத்து கைத்தொழில் மற்றும் உற்பத்தி சேவை வழங்குவதற்கு ஆசியாவின் பொருளாதார வல்லரசுகள் தற்போதே  திட்டமிடவேண்டுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவில் தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தை சுற்றி உருவாகிவரும் புதிய சந்தையை  கைப்பற்றிக்கொள்வதற்காக நீண்டகால திட்டங்களை உருவாக்குவதில் இலங்கையின் பூகோள  அமைவிடமானது பொருளாதார அபிலாஷைகள் விடயத்தில் மிகவும் முக்கியமானதாகும் எனவும் பிரதமர்  குறிப்பிட்டார்.

சீனாவிற்கு விஜயமேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செஞ்சன்  நகரில்  நேற்று நடைபெற்ற வர்த்தக முயற்சியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts:

சிங்கப்பூருக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்கும் நாடாக இலங்கை விரைவில் மாறும் - இராஜாங்க அமைச்...
ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் ஒரு எல்லை உள்ளது - ஜனநாயகத்தை மீறினால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் ...
இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ்களின் தாக்கம் அதிகரித்துள்ளது - சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை!