தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதிக்கு அறிவிப்பு!

Wednesday, August 14th, 2019

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளில் முன்னிலையாகுமாறு அறிவிக்கும் கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரிவுக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த மாதம் 20, 21, 22 மற்றும் 23 ஆகிய தினங்களில் ஏதேனும் ஓர் தினத்தில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதம் தொடர்பில் ஜனாதிபதியளிக்கும் பதிலின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெற்கு பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

சாட்சியமளிப்பதற்கு ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறும் அழைத்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி சட்சியமளிக்க வருமாறு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அறிவித்துள்ளது.

எனினும், ஜனாதிபதியின் சாட்சியமளிக்கும் தினத்தின் அடிப்படையில் இந்த உறுப்பினர்களின் சாட்சியம் பெற்றுக் கொள்ளும் திகதி மாற்றமடையலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts: