தென்பகுதிக்கு ஏற்றுமதி : கடலுணவுகளின் விலைகளில் சடுதியான மாற்றம்!

Friday, September 6th, 2019

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அண்மைய நாட்களாக மீன், நண்டு உள்ளிட்ட கடலுணவுகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி ஒரு கிலோகிராம் 400 ரூபா முதல் 500 ரூபா வரை சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட மீன் வகைகள் தற்போது 700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றன.

அதேபோல ஒரு கிலோகிராம் 300 ரூபாவிற்கு குறைவாக விற்பனை செய்யப்பட்ட மீன்வகைகள் தற்போது 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பிடிக்கப்படும் கடல் மீன்கள், இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களில் பிடிக்கப்படுகின்ற நன்னீர் மீன்கள் என்பன தென்பகுதிக்கே ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரியவருகிறது. இதனாலே கடலுணவுகளின் விலைகளில் சடுதியான மாற்றம் பதிவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts: