துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் செயற்பாடுகளை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் !
Thursday, April 22nd, 2021கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் செயற்பாடுகளை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் என்றும் அதற்கு எதிராக அடிப்படை உரிமைகள் மனுக்களை தாக்கல் செய்யலாம் அல்லது ஏதேனும் இருந்தால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம் என்றும் உயர்நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இதனை குறிப்பிட்டார்.
அத்துடன் ஆணைக்குழு யோசனையில் திருத்தங்களைச் செய்ய பரிந்துரைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கொழும்பு துறைமுக நகர ஆணைய யோசனையின் பிரிவு 63 (2) தொடர்பாக மனுதாரர்களால் முக்கிய ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டதாக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்துரைத்த ரொமேஷ் டி சில்வா, துறைமுக நகர நிலத்தை குத்தகைக்கு விடுவதன் மூலமும் 2023 ஜூன்முதல் 2028 ஜூன் வரையிலான காலப்பகுதியில் நாடு 99% இலாபத்தைப் பெறும்.
இந்த காலத்திற்குப் பிறகு நிலத்தை குத்தகைக்கு விடுவதன் மூலம் அரசாங்கத்துக்கு 100 வீத இலாபம் மற்றும் தொகை ஒருங்கிணைந்த நிதிக்கு மாற்றப்படும் என்று கூறினார்.
மொத்த நிலங்களும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையம் மற்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்களின் எல்லைக்குள் வந்துள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஆணைக்குழுவால் நிர்வகிக்கப்படும் குத்தகைக்கு விடப்பட்ட நிலம் எதிர்காலத்தில் திட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுமா என்று நீதியரசர் முர்டு பெர்னாண்டோ டி சில்வாவிடம் கேள்வி எழுப்பினார்.
நீதியரசர் பெர்னாண்டோ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டி சில்வா, குத்தகை நிபந்தனைகளுடன் இதனை சரிபார்க்கப்பட வேண்டும் என்றும், தற்போது அந்த விஷயத்தில் தம்மால் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் கூறினார். இந்த யோசனையில் நிலம் குறித்த மாகாண சபை அதிகாரம் குறிப்பிடப்படவில்லை. குறித்த நிலம் மேல் மாகாணத்தின் நிர்வாக மாவட்டத்தின் கீழ் வருவதால் அதைக் குறிப்பிட தேவையில்லை என்றும் ரொமேஷ் டி சில்வா வாதிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|