துரோகிகளை வெளியேற்றி சுத்தம் செய்யவேண்டும் – ரஷ்ய அதிபர் புடின் தெரிவிப்பு!

Friday, March 18th, 2022

உக்ரைன் மீது போர் தொடுப்பதை எதிர்ப்பவர்கள் துரோகிகள் என சாடியுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அவர்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த புடின் கூறுகையில், உக்ரைன் மீதான போருக்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தேசத் துரோகமாகும் என கூறியுள்ளார்.

துரோகிகள் யார், தேசப் பற்றுள்ளவர்கள் யார் என்பதை யாராலும், குறிப்பாக ரஷ்யர்களால் எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.

தவறி வாயில் நுழைந்துவிட்ட கொசுவைப் போல் துரோகிகளை ரஷ்யர்கள் வெளியேற்றி சுத்தம் செய்யவேண்டும், அவர்கள் களையெடுக்கப்பட வேண்டும்   என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: