துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை!

Friday, January 28th, 2022

துருக்கி வெளிவிவகார அமைச்சர் மேவலுட் சவ்சோக்லு (Mevlut Cavusoglu) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார்.

துருக்கி வெளிவிவகார அமைச்சருடன் 13 பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் இலங்கைக்கான துருக்கிய தூதுவர் ஆகியோரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று துருக்கி வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டோரை வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: