துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்த 36 பேர் மீண்டும் இலங்கைக்கு வருகை!

Wednesday, January 1st, 2020

குவைத்திற்கு வேலைவாய்ப்பிற்காக சென்று அந்நாட்டில் துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்து பின்னர் அந்நாட்டு தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண்கள் 36 பேர் இன்று (01) நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் அந்நாட்டில் வைத்து தங்களது வீட்டு எஜமான்களினால் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவித்து குவைட்டில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் விஷேட கரிசணையின் அடிப்படையில் குறித்த பெண்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: