துன்னாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: இரு பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு! 

Tuesday, October 24th, 2017

கடந்த யூலை மாதம் யாழ். வடமராட்சி துன்னாலைப் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு பொலிஸாரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று  (23) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே எதிர்வரும்-27 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts: