தீவகப் படகுகளைப் பரிசீலிக்கவேண்டும் – அதிகாரிகளுக்கு ஆளுநர் குரே உத்தரவு!

Saturday, December 15th, 2018

தீவுகளுக்களுக்கான பயணிகள் படகு சேவைகளில் ஈடுபடும் படகுகளின் தரம் மற்றும் கடல் போக்குவரத்துக்கான தகுதி சான்றிதழ்களை வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பணித்துள்ளார்.

எழுவைதீவு அனலை தீவு உள்ளிட்ட தீவுகளுக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த எழுதாரகை படகின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பான ஆராய்வுக் கூட்டம் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

”தீவகத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் படகுகளின் எண்ணிக்கை கட்டணம் விவரங்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய அறிக்கையொன்றை அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும்.

தீவகத்தில் வாழும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு படகு சேவையை நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்” என்று அதிகாரிகளுக்குப் பணித்தார்.

Related posts: