தீப்பெட்டியின் விலை 50 ரூபாவாகும் நிலை?

Thursday, July 19th, 2018

நாட்டிலுள்ள 11 தீப்பெட்டி தொழிற்சாலைகளில் 10 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் தீப்பெட்டி ஒன்றின் விலை 50 ரூபாவாகும் நிலையுள்ளதாக இப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சிலர் மூலப்பொருட்கள் உற்பத்தி தடை குறித்து மல்வத்தை அமகாநாயக்கத் தேரர் வண திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரை தெளிவுபடுத்தும் முகமாக மல்வத்தை பீடத்திற்குச் சென்ற போதே அவர்கள் தெரிவித்தனர்.

தீப்பெட்டி கைத்தொழில் துறையில் முக்கிய மூலபொருளாக் காணப்படும் பொட்டாசியம் குளோரைட், செம் பொஸ்பரஸ் என்பன இறக்குமதி செய்யப்படாத காரணத்தால் முற்று முழுதாக மேற்படி கைத்தொழில் பாதிப்படைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

6 ரூபாவிற்கு விற்கப்படும் தீப்பெட்டி எதிர்காலத்தில் 50 ரூபாவிற்கும் மேல் அதிகரிக்க வேண்டியேற்படும் என்பதுடன் தீப்பெட்டிக்கான பாரிய தட்டுப்பாடு ஒன்றும் ஏற்பட இடமிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Related posts: