திருமலையில் கொடிய நோயால் அவதியுற்ற குழந்தையின் சத்திரசிகிச்சைக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிதியுதவி!

Saturday, August 4th, 2018

இரண்டரை மாத பெண்குழந்தை கெவின்சியாவின் அவசர மருத்துவ சத்திரசிகிச்சைக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒருதொகை நிதி உதவியை வழங்கியுள்ளது.

மிக வறிய குடும்பத்தை சேர்ந்த குழந்தை கெவின்சியாவின் உயிருக்கு எந்நேரத்திலும் ஆபத்தை ஏற்படுத்தவிருக்கும் கொடிய நோயிலிந்து குறித்த சிறுமியைக் காப்பாற்றுவதற்கு சிறுமியின் பெற்றோர் பலதரப்பினரிடமும் உதவிக்கரம் கோரியிருந்த நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடமும் உதவி கோரியிருந்தனர்.

இதன்பிரகாரம் கட்சியின் திருகோணமலை மாவட்ட நிர்வாகச் செயலாளர் தங்கராசா புஸ்பராசா மற்றும் கட்சியின் தோழர்கள் மேற்கொண்ட முயற்சி காரணமாக குறித்த சிறுமியின் அவசர சத்திர சிகிச்சைக்கு தேவையான நிதியின் ஒருதொகுதி இன்றையதினம் சிறுமியின் பெற்றோரிடம் வழங்கிவைக்கப்பட்டது.

கட்சியின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த நிதி வழங்கல் நிகழ்வில் கட்சியின் திருகோணமலை மாவட்ட அலுவலகப் பொறுப்பாளர் ஞானப்பிரகாசம் பூலோகராஜன் மக்கள் தொடர்பாளர் அலுவலர் செல்வராஜ்  ஆகியோர் உடனிருந்தனர்.

38391613_225905948254750_1980911433143025664_n

Related posts: