திருட்டுக் குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய் கைது!
Tuesday, August 8th, 2017
38 ஆயிரத்து 500 ருபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
வல்லவ பகுதியைச் சேர்ந்த மல்லவத்தகே றொசான் நிலாந்த என்ற (வயது 27) என்ற இராணுவ சிப்பாயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் குறித்த இராணுவ சிப்பாய் நேற்று திங்கட்கிழமை இரவு (07.08) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையில் இருந்த 38 500 பெறுமதியான கையடக்கத் தொலைபேசி மற்றும் 700 காசினையும் திருடியுள்ளார்.
திருடியதைக் கண்ட குறித்த பெண் பயணி புகையிரத பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம், யாழப்பாணம் புகையிரத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை ; (08.08) கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இராணுவ சிப்பாயிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், யாழ்.நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
|
|