திருகோணமலை மாவட்டத்தில் 50 நனோ தொழிநுட்ப வசதியுடன் கூடிய குடிநீர்த் திட்டம் – இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்ததெரிவிப்பு!

Sunday, August 1st, 2021

திருகோணமலை மாவட்டத்தில் குடிநீர் வசதி அற்ற பிரதேசங்களுக்கு 50 நனோ தொழிநுட்ப வசதியுடன் கூடிய குடிநீர் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கிராமிய குடிநீர் வழங்கல் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

குடிநீர் வசதியற்ற பிரதேசங்களுக்கு உடனடி மற்றும் மத்தியகால அடிப்படையிலான தீர்வுகளை வழங்கவுள்ளோம். மாவட்டத்தின் பல பிரதேசங்களில் சிறுநீரக நோயாளிகள் காணப்படுகின்றனர். குறித்த பிரதேசங்களின் தேவைககளை முன்னிலைப்படுத்திய வேலைத்திட்டங்களின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் மூலம் குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்படவுள்ள பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டங்கள் குறித்த இனத்திற்கு மாத்திரமன்றி  அனைத்து இன மக்களுக்கும் கிடைக்கும் வகையில் தற்போது எம்மால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது.

தற்போது மேற்கொள்ளப்படவுள்ள குடிநீர் திட்டம் காரணமாக குடிநீர் இணைப்பு அற்ற பிரதேசங்களுக்கு உரிய இணைப்பு குறுகிய காலத்தில் வழங்கப்படும் என்று இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: