திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க மின்சார சபைக்கு 10 ஏக்கர் நிலம் கொள்வனவு – அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, June 21st, 2022

முத்துராஜவெலயில் 10 ஏக்கர் காணியை மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்காக இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கெரவலப்பிட்டிய, முத்துராஜவெலயில் உள்ள யுகதனவி மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகாமையில் உள்ள காணி 300 மெகா வொட் திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்காக இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படவுள்ளது.

காணியை இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கான கோரிக்கைக்கு காணி அபிவிருத்தி அதிகாரசபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இக்காணியை மதிப்பீடு செய்து சந்தை விலையில் கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: