தியாகி பொன். சிவகுமாரன்  நினைவுதினம் இன்று!

Tuesday, June 5th, 2018

மூவின மக்கள் வாழுகின்ற இந்த சின்னம் சிறிய தீவில் 1956ம் ஆண்டு சிறிலங்காவின் அன்றைய அரசால் கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் என்கின்ற சட்டம், அதைத் தொடர்ந்து 1971 இல் திட்டமிட்டு தமிழ் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வி மீதான தரப்படுத்தல் சட்டம் ஆகிய இரண்டும் தான், தமிழர் கள் இனரீதியாக ஆளும் பெரும் பான்மை சிங்கள அரசுகளால் புறக்கணிக்கப் படுகிறார்கள் என்பதனை பகிரங்கமாக வெளிப்படுத்தி நின்றது.

தமிழ் இளைஞர்களை சிங்கள அரசுகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராட வைத்த அடக்கு முறைகளின் ஆரம்ப புள்ளி இந்த இரண்டும் தான். இவற்றின் வேளிப்பாடாக குறிப்பாக பல்கலைக் கழக அனுமதியில் தமிழ் மாணவர்களுக்கு எதிரான தரப் படுத்தல் சட்ட மூலத்தை எதிர்த்து 1971ம் ஆண்டு தமிழ் மாணவர் பேரவை என்கின்ற அமைப்பு உருவாகி , தமிழ் மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு , முதன் முதலில் யாழ்ப்பாணத்தில் மாபெரும் மாணவர்களின் எழுச்சி ஊர்வலம் ஒன்று நடாத்தபட்டது.

இளஞர் எழுர்சியின் முதல் முன்னெடுப்பாகிய இந்தப் போராட்டத்தை முன்னின்று ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்கு வகித்ததில் இருந்து ஆரம்பமாகிறது தியாகி பொன் சிவகுமாரனின் வீர வரலாறு.

பின்னர் 1974ம் ஆண்டில் யாழ்ப்பாண வீரசிங்க மண்டப முன்றலில் நடைபெற்றுக் கொண்டிருந்த 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வின் போது அரச காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 11அப்பாவித் தமிழர்கல் ஸ்தலத்திலேயே கொலை செய்யப்பட்ட கொடுரத்தை நேரில் பார்த்ததில் இருந்து வீறு கொண்ட வேங்கையாக அரச காவல்துறையினர் மீதான தாக்குதல்களை ஆரம்பிக்கிறான் தியாகி சிவகுமாரன்.

சிறிலங்கா காவல்த் துறையினரால் தேடப்பட்டு வந்த தியாகி பொன், சிவகுமாரன் 1974 ஜூன் 5ஆம் நாள் முக்கிய தாக்குதல் ஒன்றிற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுக் கொண்டிருத்த போது பொலிசாரினால் சுற்றிவளைக்கப் படுகிறான். சிங்கள காவல் துறையிடம் உயிருடன் புடி படக் கூடாது என்பதற்காக தன் வசம் என்றும் வைத்திருக்கும் சயனைட் குப்பியை கடித்து தன உயிரை தானே மாய்த்துக் கொள்கிறான் அந்தக் கணதிலேயே. உரிமைப் போராக ஆரம்பித்து பின்னர் விடுதலைப் போராக வளர்ச்சி பெற்ற ஈழப் போரில் முதன் முதல் நஞ்சருந்தி வீரச்சாவடைந்த முதல் போராளி என்கிற பெருமையை பெறுகிறான் சிவகுமாரன்.

எமது தேசத்தின் நாளைய தூண்களான மாணவ சமூகமே நாளைய எம் நாட்டைக் கட்டியெழுப்பும் இளைய சிற்பிகள். மாணவப் பருவத்திலேயே எமது இனத்தின் விடியலிற்காய் தம் உயிரை அர்ப்பணம் செய்தவர்களில் தியாகி சிவகுமாரன் முதல் இடம் பெறுகிறான் 1950 ஆகஸ்ட் 26இல் உரும்பிராய் பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் மகனாகப் பிறந்த சிவகுமாரநின் உருவச்சிலை மூன்று தடவைகள் ஸ்ரீ லங்கா இரனுவதின்ரால் உடைக்கப் பட்டது.

இறுதியாக இன்று உரும்பிராய் சந்தியில் வெண் கலத்தில் மின்னிக் கொண்டிருக்கும் அவனது நான்காவது திரு உருவச்சிலை, 1999ம் ஆண்டு பலத்த இரணுவக் கெடுபுடிகளின் மத்தியிலும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரால் வடிவமைத்து நிறுவப் பட்டு தோழர் டக்லஸ் தேவானந்தா அவர்களினால் திறந்து வைக்கபட்டது வரலாறு.

ஜூன் 6ஆம் நாளாகிய இன்றைய அவனின் 44 வது நின்வஞ்சலி நாளில் அந்த வரலாற்று நாயகனையும் ஈழப் போராட்டத்தில் மரணத்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தோழர்களையும் நினைவுகூர்ந்து இன்றைய தினம் விடுதலை வித்துக்கள் தினமாக பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது.

இதை ஒட்டிய அஞ்சலி நிகழ்வு உரும்பிராய் சந்திக்கு அருகில் உள்ள சிவகுமாரனின் நினைவிடத்தில் இன்று செவ்வாய்கிழமை மாலை நான்கு மணிக்கு இடம் பெறும் என் அறிவித்துள்ளது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி.

….கோவை நந்தன்

Related posts: