தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு!

Thursday, March 28th, 2019

தமது பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சர் மற்றும் நிர்வாக அதிகாரிகள் தீர்வு வழங்காமை உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று முன்தினம்(26) முதல் தாதியர்கள் சிலர் முன்னெடுத்த சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை இன்று(28) காலை 8 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

குறித்த போராட்டம் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளின் சேவைகளும் பாதிக்கப்பட்டதுடன், நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு முகம் கொடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

இருப்பினும் இன்று தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க சுகாதார அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், நாடளாவிய ரீதியில் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: