தவறான முடிவெடுத்து மாணவி உயிர் நீத்தார்!

Friday, November 23rd, 2018

வீட்டில் தொடர்ச்சியாக தொலைக்காட்சி பார்ப்பதை வெளிநாட்டில் உள்ள சகோதரன் கண்டித்தார் என்றுகூறி மாணவி தவறான முடிவு எடுத்து உயிர்நீத்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் அராலி தெற்கு வட்டுக்கோட்டையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.

அதே இடத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகம் சாரு (வயது 19) என்ற மாணவியே தவறான முடிவெடுத்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் உயர்தரத்தில் அவர் கல்வி கற்று வந்தார்.

மாணவியின் சடலத்துக்கு அண்மையில் கடிதம் ஒன்று மீட்கப்பட்டது. போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் விசாரணை நடத்தி சடலத்தை ஒப்படைத்தார்.

Related posts: