நாடு முழுவதும் மீண்டும் நடைமுறைக்கு வந்தது ஊரடங்கு – யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் வைரஸ் தொற்று பரவும் அபாயம் மிக்க வலயங்களாக பிரகடனம் – ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு!

Monday, April 6th, 2020

கொழும்பு, கம்பஹா களுத்துறை புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஆறு மாவட்டங்களும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் மிக்க வலயங்களாக பிரகடனபடுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த ஆறு மாவட்டங்களிலும் தற்போது நடைமுறையில் உள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் மீள் அறிவித்தல் வரை நீடிக்கும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனிடையே கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களிலும் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிற்பகல் 2 மணிமுதல் அமுலுக்கு வந்துள்ளது.

மேலும் அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த ஏனை அனைத்து போக்குவரத்துக்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன், மாவட்டங்களிலிருந்து மாவட்டத்திற்கு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல், ஏப்ரல் 6 ஆம் திகதி இன்று வரைக்கும், கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வெளிமாவட்டங்களிலிருந்து கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் தொழில் நிமிர்த்தம் வந்திருந்த பலரும் சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல் பல்வேறான நெருங்கடிக்களுக்கு முகம்கொடுத்துள்ள நிலையில், தமிழ்-சிங்கள புத்தாண்டும் வரவுள்ளது குறிப்பிடத்தகக்கது.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் நடமாடிய 40 பேர் யாழ்ப்பாண போலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் பல பாகங்களுக்கு இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தும் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளதாக எச்சரிக்கப்பட்டு அதிலிருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக ஊரடங்கு அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் இன்றையதினம் யாழ் நகரப் பகுதியில் அதிகாரிகளால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்கள் இன்றி நடமாடிய 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: