தலைக் கவசங்களுக்கு தரச் சான்றிதழ் அவசியம்!

Monday, November 14th, 2016

மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் அணிகின்ற தலைக்கவசங்களுக்கு இலங்கைத் தரக் கட்டுப்பாட்டுச் சபை வழங்கும் தரச் சான்றிதழ் பெறப்பட்டிருக்கவேண்டுமென நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு நுகாவோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் அணியும் தலைக்கவசவங்களுக்குத் தரச் சான்றிதழ் இருக்கவேண்டுமென்ற சட்டம் இருந்தபோதிலும் அந்தச் சட்டம் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே சுட்டிக்காட்டியுள்ளார்.

தலைக்கவசங்களுக்கு தரச் சான்றிதழ் பெறப்’பட்டிருக்க வேண்டமென்ற நட்டம் இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் நடைமறைக்கு வந்தது. எனினும், தலைக்கவசங்களை இஙக்குமதி செய்யும் பல நிறுவனங்கள் அந்தச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்காக இதுவரை கால அவகாசம் சழங்கப்பட்டிருந்தது. பெரும்பாலான நிறுவனங்கள் இப்போது அந்தச் சான்றிதழை பெற்றிருப்பதால் இந்தச் சட்டம் இனிமேல் கடுமையாகச் செயற்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

Shoei-RF-1200-Helmet

Related posts: