தரமற்ற அரிசி வகை விற்பனை!

Saturday, January 20th, 2018

ஹட்டன் – வட்டவலைஆகிய பகுதிகளில் பாவனைக்கு உதவாத அரிசி வகை விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பாவனையாளர்கள் முன்வைத்த முறைப்பாடுகளை தொடர்ந்து குறித்த பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களை பொதுசுகாதார பரிசோதகர்கள்பரிசோதனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபா 50 முதல் 60 வரையான விலையில் இவ் அரிசி வகை விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் இந்த அரிசியை சமையலுக்கு பயன்படுத்தும் போது கைகளில் ஒட்டும் தன்மையுடையதாக இருக்கின்றது என பாவயாளர்கள் தெரிவிக்கின்றனர்

Related posts: