தமிழ் மொழிக் கொலைக்கு இடமளிக்கமாட்டேன்த – அமைச்சர் மனோகணேசன்!

Saturday, September 17th, 2016

அரச அலுவலகங்களில் மற்றும் அரச திணைக்களங்களில் தமிழ் மொழியைக் கொலை செய்வதற்கு இடமளிக்கமுடியாது என தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் உள்ள இலத்திரனியில் அறிவிப்புப் பலகைககளில் தமிழ் மொழி மோசமான தவறுகளுடன் பிரசுரிக்கப்படுவதை நேரில் சென்று ஆராய்ந்த நிலையிலேயே அமைச்சர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.

தலைநகர் கொழும்பு உட்பட தென்மாகாணங்கள் மற்றும் வடக்குக் கிழக்கு மாகாணங்களிலும்கூட தமிழ் மொழி பிழையாக பிரசுரிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே.

இதனையடுத்து, கொழும்பு புறக்கோட்டை பிரதான புகையிரத நிலையத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இலத்திரனியில் அறிவிப்புப் பலகைகளில் தமிழ் மொழி பாரிய பிழைகளுடன் பிரசுரிக்கப்படுவது தொடர்பில் அரச கரும மொழிகள் அமைச்சரான மனோ கணேசனிடம் முறையிடப்பட்டது.

இதனைநேரில் சென்று ஆராய்ந்த அமைச்சர் மனோகணேசன், தமிழ்மொழியை பிழையின்றி பிரசுரிக்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன், அரச அலுவலகங்களிலும் திணைக்களகங்களிலும் அதே போல் பொது இடங்களிலும் தமிழ் மொழிப் பாவணை இனிவரும் காலங்களில் தவறுகள் இன்றி பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

mano

Related posts:

அஞ்சல்துறை பணியார்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் - அமைச்சர் பந்துல குணவ...
வேலைத்திட்டங்களை இடைநடுவே நிறுத்தாது பூர்த்தி செய்வதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்பட வ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஒலுவில் துறைமுகம் மிக வேகமாக இயங்க வைக்கப்படுவது போல மக்களினது வாழ்வ...