தமிழ் இளைஞர்களைக் காணாமல் ஆக்கிய கட்சியே இப்போது வவுனியாவில் போராட்டம் நடத்துகிறது – சுமந்திரன் எம்.பி!

Monday, March 6th, 2017

காணாமற்போனோருக்காக வவுனியாவில் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள் அந்தக் கட்சியினர்தான் கடந்த காலங்களில் தமிழ் இளைஞர்கள் பலரைக் காணாமற் ஆக்கியிருந்தனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பேச்சாளருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துளளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜ.நா.வின் முன்னாள் பொதுச்செயலர் பான்கிமூன் கடந்த ஆண்டு யாழ்ப்பாணம் வந்திருந்தார். யாழ்ப்பாண பொது நூலகத்தில் சந்திப்பு நடந்தது. பொது நூலகத்தின் முன்பாக காணமாற்போனோரின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர் அவர்கள் சம்பந்தா, சுமந்திரா எங்கே போனீர்கள் என்று ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். இதன் போது எனது அருகில் நின்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் எங்களது பெயரைச் சொல்லிக் கத்தினால் நியாயம் இருக்கு. சம்பந்தம் இல்லாத உங்களுடைய பெயரைச் சொல்லிக் கத்துகின்றார்கள் என்றார்.

வவுனியாவில் காணாமற்போனோரின் உறவினர்கள் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக ஒரு அரசியல் கட்சி போராட்டம் நடத்தியதாகப் பத்திரிகையில் பார்த்தேன். அந்தக் கட்சியினர்தான் கடந்த காலங்களில் இளையோர்களைக் கடத்திச் சென்றவர்கள் என்றார்.

Related posts: