தமிழர் பிரச்சினைக்கு இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் – இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவிப்பு!

Tuesday, August 1st, 2023

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நிலத்தொடர்புக்கு சார்பாக, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

பொருளாதார வளர்ச்சியில் இருந்து பயனடைவதற்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கும் இது அவசியமானது என்று மொரகொட தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு செல்லும் பயணத்தை அதிகரிப்பதற்காக தரைப்பாலங்கள், பாலங்கள், குழாய்கள், மின்சாரம் கடத்தும் பாதைகள் மற்றும் தரையிறங்கும் உட்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமிழர் பிரச்சினைக்கு இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கும் அதன் அண்டை தீவுக்கும் இடையிலான உறவுகளை வளர்ப்பதற்கு நில இணைப்பு அவசியம் எனவும் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: