தமிழகத்திலிருந்து நாடு திரும்ப விரும்புவோருக்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கொடுக்கவேண்டும். – டக்ளஸ் தேவானந்தா

Thursday, May 5th, 2016

இந்தியாவிலிருந்து நாடு திரும்பவிருக்கின்ற அகதிகளுக்கு இலங்கை அகதிகளுக்கு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நேற்று நாடாளுமன்ற கெள்வி நேரத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

பிரதமரிடம் கேள்விகளைக் கேட்கும் நேரத்தில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா ‘குழப்பங்கள் காரணமாக இந்தியாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் சென்றிருப்போரை, நாட்டுக்குள் அழைத்துவருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இது தொடர்பாக நிலைப்பாட என்னவென்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன் வருவோருக்குப் பிரஜாவுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும்.இலங்கைக்குத் திரும்புவோருக்கு பிரஜாவுரிமை வழங்கப்படுவதோடு ‘பிள்ளைகளுக்கான பிறப்புச் சான்றிதழ், திருமணப் பதிவுச் சான்றிதழ் விவகாரங்களைக் கையாள்வதற்கு, இந்தியாவிலுள்ள இலங்கையின் துணைத் தூதுவர் ஊடாக, நடவடிக்கை எடக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

Related posts:

முப்பது வருட யுத்ததை வெற்றிகொண்டதில் எமக்கும் பங்குண்டு – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!
எதிர்வரும் 21ஆம்முதல் வடமாகாண மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்க ஏற்பாடு – தவறாது பெற்றுக்கொள்ளுமாற...
எரிபொருள் கொள்வனவு தொடர்பில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை - எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்...