தபால் மூலமான வாக்களிப்பு பெறுபேறு தனியாக வெளியிடப்படமாட்டாது!

Wednesday, December 27th, 2017

341 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த உள்ளுராட்சி தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 5 இலட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தபால் மூலமாக வாக்களிப்பு ஜனவரி 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இம்முறை உள்ளுராட்சிமன்ற தேர்தல் பெறுபேறுகளுடன் தபால் மூலமாக வாக்களிப்பு குறித்து பெறுபேறு தனியாக வெளியிடப்படமாட்டாது.

தபால் மூலமான வாக்களிப்பு இடம்பெற்ற பின்னர் அந்த வாக்குகள் உள்ளுராட்சி மன்றத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள தெரிவு அத்தாட்சி அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படும். இதன் பின்னர் இவரின் வாக்களிப்பு மத்திய நிலையத்திற்கு பொறுப்பானவரிடம் ஒப்படைக்கப்படும்.

இதன்போது ஏனைய வாக்குகளுடன் இவை ஒன்று சேர்க்கப்பட்டு இந்த தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும்; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்

Related posts: