தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 665 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல்!

Tuesday, September 7th, 2021

நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 665 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தக் காலப்பகுதியில், 69 வாகனங்களும் பொலிசாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 66 ஆயிரத்து 668 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: