தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

Tuesday, November 27th, 2018

நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் WWW.doenets.lk என்ற இணையத்தளத்தில் தமது அடையாள அட்டை இலக்கத்தை பதிந்து பரீட்சை அனுமதி அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இணையத்தளத்தில் News headlines என்ற பகுதிக்குள் பிரவேசித்து பரீட்சை அனுமதி அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என அந்த திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 6 இலட்சத்து 50 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன், அதில் 233,791 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: