தனக்கு சொந்தமான போர்க்கப்பலை மூழ்கடித்த உக்ரைன் – வெளியான அதிர்ச்சி காரணம்!

உக்ரைன் தனது போர்க்கப்பலை ரஷ்யர்களின் கைகளில் சிக்காமல் இருக்க கடலில் மூழ்கடித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து ஒன்பது நாட்களாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், உக்ரைன் ராணுவ சீருடையில் பல பகுதிகளில் ஊடுருவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உக்ரைன் தனது போர்க்கப்பலான ஹெட்மேன் சஹைடாக்னியை மூழ்கடித்ததாகக் கூறப்படுகிறது. உக்ரைனின் மைகோலேவ் கடற்கரையில் ஹெட்மேன் சஹைடாச்னி அமைந்துள்ளது.
இதற்கிடையில், ரஷ்யா தனது தாக்குதலை மைக்கோலேவில் தீவிரப்படுத்தியது. எனவே, எதிரியின் கைகளில் சிக்காமல் இருக்க ஹெட்மேன் சஹைடாச்னியை கடலில் மூழ்கடிக்குமாறு கப்பலின் தளபதி உத்தரவிட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதை உறுதிப்படுத்தும் வகையில் கடலில் மூழ்கிய போர்க்கப்பல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|