தடையின்றிய மின்விநியோகத்திற்கு 10 மின்பிறப்பாக்கிகள்!

மின்சார விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்கு தம்மிடமுள்ள 10 மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்துவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதற்காக கொழும்பின் 10 நகரங்களில் மின்பிறப்பாக்கிகள் அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன் ஜயவர்தன குறிப்பிட்டார்.
2.5 கிலோ வோட் மின்வலு கொண்ட 2 மின்பிறப்பாக்கிகளும், 11 கிலோ வோட் மின்வலு கொண்ட 8 மின்பிறப்பாக்கிகளும் பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்சாரத்திற்கான கேள்வி அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் அவை தேசிய கட்டமைப்புகளுடன் இணைக்கப்படும் என மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த இரண்டு நாட்களில், நாட்டில் பெய்த மழையால் நீர் மின் உற்பத்தி 40 வீதமாக அதிகரித்துள்ளது. நுரைச்சோலை மற்றும் கெரவலப்பிட்டி ஆகிய மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட ஏனைய உற்பத்தி நிலையங்களிலும், தேவைக்கேற்ப மின்சாரம் உற்பத்தி செய்யபடுவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது
Related posts:
ஜனவரி 9 முதல் 11 வரை புதிய அரசியல் அமைப்பு குறித்து விவாதம்!
முடக்க நிலையால் 276 பாடசாலை நேரங்கள் இழக்கப்பட்டுள்ளன : நிவர்த்தி செய்ய வாரத்தின் ஏழு நாட்களும் பாடச...
இடி - மின்னல் தாக்கம் அதிகரிப்பு - பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
|
|