தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகயுக்கு இலங்கைக்கு யுனிசெவ் பாராட்டு!

Friday, August 27th, 2021

நாட்டில் தடுப்பூசி ஏற்றல் செயற்பாடு விரைவாகவும் வெற்றிகரமாகவும் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவரும், யுனிசெவ் அமைப்பின் இலங்கை பிரதிநிதியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கொவெக்ஸ் திட்டத்தினூடாக ஜப்பானின் நன்கொடையில் யுனிசெவ் மற்றும் ஜப்பான் தூதரகம் இணைந்து, தடுப்பூசிகளை கொண்டு செல்வதற்கான 750 உபகரணங்களையும் தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்துவதற்கான 300 குளிர்சாதன பெட்டிகளையும் 100 குளிர்கால பாதுகாப்பு குளிர்சாதன பெட்டிகளையும் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கின.

இந்த நன்கொடையை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல பெற்றுக்கொண்டார்.

இதனிடையே நாட்டின் சுகாதார துறைக்காக, ஜப்பான் அரசாங்கம் கடந்த வருடத்தில் மாத்திரம் 16.2 மில்லியன் டொலர் நன்கொடை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: