தகுதியானவர்களுக்கு தகுதிகளை வழங்கி சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் – சபாநாயகர் கரு ஜயசூரிய!

Monday, March 20th, 2017

ஊழல் வன்முறையற்றதும் தகுதியானவர்களுக்கு தகுதியானவற்றை வழங்கி சிறந்த சமூகமொன்று கட்டியெழுப்பப்படவேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தேசிய ஐக்கியம் இன்றி நாடு முன்னோக்கி பயணிக்க முடியாது என்றும் சபாநாயகர் கூறினார்.

தேசிய ஐக்கியத்திற்கான பாக்கீர் மாக்கார் மத்திய நிலையம் மற்றும்இலங்கை பத்திரிகை நிறுவனங்கள் ஒருங்கிணைந்து 2006ம் ஆண்டு தயாரித்த தேசிய ஐக்கியத்திற்கான ஊடகப் பணி குறித்த ‘வெலிகம பிரகடனம்’ தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த நிகழ்வு அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று காலை இடம்பெற்றது. இதில் சபாநாயகர் கரு ஜயசூரிய உரையாற்றினார்.

தொடர்ந்து உரையாற்றிய சபாநாயகர் கரு ஜயசூரிய தகவல் அறியும் சட்டத்தை விரைவாக அமுல்படுத்தப்பட்டமை மகிழ்ச்சிக்குரிய விடயம் மக்களுக்கு சிறந்த சமூக வாழ்க்கை முறையை பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

சுயாதீன ஆணைக்குழு செயற்படுகின்றமை திருப்திக்குரிய விடயமாகும். தேசிய ஐக்கியத்திற்கு ஊடகங்கள் பெருமளவு பங்காற்ற முடியும். இதற்காக ஊடகங்கள் சுயமான விமர்சனங்களை மேற்கொள்ள முடியமென்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Related posts: