தகவல் அறியும் உரிமை தொடர்பான சர்வதேச மாநாடு இன்று ஆரம்பம்!

சர்வதேச தகவல் அறியும் உரிமை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச மாநாடு இன்று (28) கொழும்பில் நடைபெறுகின்றது.
தகவல்களை அறிந்துகொள்ளல் மற்றும் ஊடக மறுசீரமைப்பு என்ற தொனிப்பொருளில் இம்மாநாடு இடம்பெறவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது. தகவல்களை அறிந்துகொள்ளல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பிராந்திய மற்றும் சர்வதேச அனுபவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை, பரிமாற்றிக் கொள்ளல் மற்றும் நாட்டிற்குள் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் முன்னிலைப்படுத்தி நம்பிக்கையான அரசியல் கலாச்சாரம் ஒன்றை உருவாக்குவதற்குத் தேவையான வெகுசன ஊடகத்தை மறுசீரமைப்பது தொடர்பில் பயனுள்ள கலந்துரையாடலை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டிற்காக தெற்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய மற்றும் கனடா நாடுகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
Related posts:
|
|